×

கிளை சிறைகளில் துப்புரவு பணியாளர் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், நவ. 14: நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் கிளைச்சிறைகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள கிளை சிறைகளான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தியில் உள்ள பாஸ்டல் சிறைகளில் காலியாக உள்ள தலா ஒரு துப்புரவு பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து  சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர்  தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது: சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச்சிறைகளான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்தியில் உள்ள பார்ஸ்டல் பள்ளியில் காலியாகவுள்ள தலா ஒரு துப்புரவு பணியாளர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இனச்சுழற்சி முறையில்  பொதுப்பிரிவில் முன்னுரிமையற்றவரில் இரண்டு பணியிடம், ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவரில் ஒரு பணியிடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஒரு பணியிடம்  என்று நிரப்பப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

 ஆதிதிராவிடர்கள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் 32வயதுக்குள்ளும், பொது பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (சுயகுறிப்பு, கைபேசி எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பிட வேண்டும். நேரில் வரும் விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படமாட்டது. இவ்விண்ணப்பங்கள் வரும்  30ம் தேதிக்குள் சேலம் மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். சுய விலாசமிட்ட உறையில் ₹ 22 க்கான அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பப்பட வேண்டும். இப்பதவிகளை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பின்னர் தெரிவிக்கப்படும். 31ம் தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. இவ்வாறு தமிழ்ச்செல்வன்  தெரிவித்துள்ளார்.

Tags : vacancy cleanup ,branch prisons ,
× RELATED வேளாண் விற்பனை கூடங்களில் தேங்காய்...