×

55 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சோளிங்கர், நவ.12: காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 743 ஊராட்சிகளில் அரசுக்குட்பட்ட இடங்களில் பழ வகை மரக்கன்றுகளை நட வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்படி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி சோளிங்கர் அடுத்த வெங்குப்பட்டு  கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ சம்பத் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். இதில் மகிழம், மகாகனி, அரசமரம், பூவரசம், மா, பலா, கொய்யா, அத்தி, நாவல், பூமருது, சீதா, பாதம், கடம்பு, நீர் மருது, தேவதை, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயிரம்  மரக்கன்றுகள்  நடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்