×

தென்காசி, குற்றாலம் வீட்டு வசதி சங்க நிர்வாக குழு கூட்டம்

தென்காசி, நவ.12: தென்காசியில் தென்காசி- குற்றாலம் வீட்டுவசதி சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் குற்றாலம் சுரேஷ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வினிஷ் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் குத்தாலபெருமாள், சின்னத்தம்பி, சுப்பிரமணியன், சரஸ்வதி, ஜெயா, இசக்கியம்மாள் மற்றும் சங்க செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வெற்றிக்கு பாடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியனுக்கு நன்றி தெரிவிப்பது, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னத்தம்பிக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தென்காசி குற்றாலம் வீட்டுவசதி சங்கத்தில் வீட்டுவசதி இணையத்தின் மேலாண்மை இயக்குனர் பழனிவேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் தலைவர் சுரேஷ், இணைய மாவட்ட அலுவலர் அழகுதுரை, சங்க செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Executive Committee Meeting of Courtallam Housing Association ,Tenkasi ,
× RELATED தென்காசியில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது