×

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கம்

திருவெண்ணெய்நல்லூர், நவ. 12: திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் நடைபெறும் திருட்டு, கொலை, கொள்ளை, விபத்துக்கள், போக்குவரத்து விதிமீறல், அடிதடி தகராறு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையிலும் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் நோக்கிலும் வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி, பேருந்து நிலையம், காவல்நிலையம் மற்றும் மக்கள் கூடும் பேரூராட்சியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. காவல்நிலையம் முன்பு பூஜை போடப்பட்டு முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டது. இப்பணிகளை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், வணிகர் சங்கத்தலைவர் சாந்தமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன், திமுக நகர செயலாளர் கணேசன், ஜோதி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.


Tags : Thiruvennayinallur ,
× RELATED விஸ்வநாதபேரியில் சோலார் தெரு விளக்குகள் துவக்க விழா