×

மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது

விழுப்புரம், நவ. 12:  விழுப்புரம் அருகே குடும்பம் நடத்த வராத மனைவியை சரமாரியாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே காணை தேர்முட்டித்தெருவைச் சேர்ந்தவர் சிவா(28). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் முனிஸ்வரன்கோயில் தெருவைச் சேர்ந்த தெய்வானை(25). ஆகியோருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்ைத உள்ளது. இதனிடையே சிவா தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். போதையில் மனைவியிடம் பிரச்னை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 ஒரு கட்டத்தில் பொறுத்து பார்த்த தெய்வானை பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஓராண்டுகள் கழித்து, மனைவியை குடும்பம் நடத்த அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு சிவா சென்றுள்ளார். தெய்வானை வர மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த சிவா, மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்தனர்.

Tags :
× RELATED கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை