×

விக்னேஷ் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் சாதனை

வேலூர், நவ.8: மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து தேசிய அளவிலான வினாடி வினா, ஓவியம் வரைதல் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகளை கடந்த அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடத்தினர். இப்போட்டிகளில் திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்து வென்றனர். மேலும் இணையவழி மூலம் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளியின் சிறந்த வினாடி வினா அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் ஆர்.குப்புசாமி, நிர்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வர் சி.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து கூறி பாராட்டினர்.

Tags :
× RELATED சாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய்...