×

சேடபட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பேரையூர், நவ. 8: பேரையூர் தாலுகா, சேடபட்டி யூனியன் அலுவலகத்திலுள்ள மகளிர் குழு கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், ஜெயபால், ஆகியோர் தலைமையில், மதுரை குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் ஸ்டீபன், சிவகெங்கை மாவட்டம் மனிதம் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் வனராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப்பணியாளர் அருள்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் உரிமைகள், சந்திக்கும் பிரச்னைகள், கையாளும் முறைகள், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, ஆழ்துளை கிணறுகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட கருத்துக்களை இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழு, ஊராட்சி செயலர்கள் (கிளர்க்), கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம செவிலியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூகநலத்துறை பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை தொடர்ந்து வெளிப்படுத்தி கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது.

Tags : Child Protection Awareness Camp ,Sedapatti ,
× RELATED சேடபட்டி அருகே நலவாரிய அட்டை இருந்தும் நிவாரணம் இல்லை