வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது  மண்டல அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது தொடர்பான  அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம், உள்ளகரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில்  நேற்று நடந்தது.மண்டல உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், திமுக சார்பாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், பகுதி செயலாளர்  ரவிச்சந்திரன், திமுக திட்டக்குழு செயலாளர் பாலவாக்கம் சோமு,  நிர்வாகிகள் திவாகர் சங்கர் ஜெய், அதிமுக சார்பாக பகுதி அவைத் தலைவர் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், மணிகண்டன், காங்கிரஸ் சார்பாக பகத்சிங், முன்னாள்  கவுன்சிலர் அங்கமுத்து, பாஜ சார்பாக சீதாராமன், தேமுதிக  சார்பாக டில்லிபாபு, கோட்டைசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தெருக்கள் மற்றும் வாக்குச்சாவடி மாற்றம், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் போன்ற குறைகளை நீக்குவது சம்பந்தமான மனு கொடுத்தார்.  அதேபோல் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ்  நிர்வாகிகளும் மனுக்களை அளித்தனர்.மனுக்களை பெற்றுக்கொண்ட உதவி ஆணையர் பாஸ்கரன், அரசியல் கட்சியினர் கொடுத்த மனுக்களை ஆராய்ந்து, தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: