லாரி மோதி தம்பதி படுகாயம் ஆம்புலன்ஸ் வர தாமதம் பொதுமக்கள் சாலை மறியல்

புழல்: பைக்கில் சென்ற தம்பதி மீது லாரி மோதியதில் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (40), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் நேற்று காரணோடை அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டு சாலை அருகே பைக்கில் சென்றபோது, அவ்வழியே வந்த லாரி,  இவர்களின் பைக் மீது வேகமாக மோதியது.
Advertising
Advertising

இதில், பைக்கில் வந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர், தாமதமாக வந்த ஆம்புலன்சில் படுகாயமடைந்த கணவன், மனைவியை ஏற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: