செல்போன் பறித்த சிறுவன் கைது

சென்னை: கல்லூரி மாணவனிடம் செல்போன் பறித்த சிறுவனை போலீசார் கைது ெசய்தனர்.சென்னை பட்டாளம், மசூதி 1வது தெருவை சேர்ந்தவர் முகமது இர்பான் (20), இவர், சென்னை அருகே உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு டவுட்டன் பாலம் அருகே கல்லூரி  பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சிறுவன் ஒருவன், இர்பான் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினான்.  
Advertising
Advertising

இதுகுறித்து முகமது இர்பான் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பெரியமேடு பகுதியை ேசர்ந்த 17 வயது சிறுவன்,  செல்போன் பறித்து சென்றது தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Related Stories: