சிறுதானிய விழிப்புணர்வு பேரணி

மேட்டூர், நவ.1: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நங்கவள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நங்கவள்ளியில்  வட்டார வேளாண்மைத்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ்,  சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நங்கவள்ளி  வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை  இயக்குனர் சௌந்திரராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த வேளாண்மை  விவிவாக்க மைய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக  பேருந்து நிலையத்தை அடைந்தது. சிறுதானியங்களை பயன்படுத்துவோம் சர்க்கரை  நோயை கட்டுப்படுத்துவோம். சிறுதானியங்கள் சாகுபடி செய்து உரச்செலவை  குறைப்போம், மதிப்பு கூட்டுவோம், மும்மடங்கு வருமானம் பெறுவோம் என்ற  வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகள், வேளான் துறை அலுவலர்கள்  பேரணியில் பங்கேற்றனர்.

Related Stories: