×

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தர்மபுரி, அக்.23: பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று, மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில், 167 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் 2,250 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், பண பரிவர்தனை பாதிக்கப்பட்டது. தேசிய மாக்கப்பட்ட வங்கிகள் திறந்திருந்தாலும் பணிகள் நடக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை இந்தியன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் கலியுல்லா தலைமையில், இந்தியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கிகளை இணைக்கக்கூடாது, வங்கியில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Bank employees ,banks ,
× RELATED ரயில்வே துறையை தனியாருக்கு...