×

பயிற்சி ஆசிரியர் தற்கொலை

திருக்கோவிலூர், அக். 23: திருக்கோவிலூர் அடுத்த முருக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் சந்தியா (23). இவர் திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவரும்,  திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் திருமூர்த்தி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தியா திருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினாராம். அப்போது திருமூர்த்தியும், அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து சந்தியாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சந்தியா வீட்டிற்கு வந்து சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சந்தியாவின் தந்தை அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Practice teacher suicide ,
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...