×

நத்தத்தில் அதிமுக கொடியேற்று விழா

நத்தம், அக். 18: அதிமுக கட்சி துவங்கி 47 ஆண்டு நிறைவையொட்டி நேற்று நத்தம் அதிமுக சார்பில் மீனாட்டுபுரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட பேரவை துணை செயலாளர் ஜெயபால், முன்னாள் பேரூராட்சி துணைதலைவர் முகமது அப்பாஸ், நகர பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சதாசிவம், செல்லப்பாண்டி, சிதம்பரம்,ஆறுமுகம், செந்தில்நாதன், சுரேஷ் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இலக்கிய அணி செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக எம்ஜிஆர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Tags : flag flag ceremony ,Natham ,
× RELATED நத்தம் அருகே உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு வீடு அன்பளிப்பு