×

வேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி

வேலூர், அக்.18: வேலூர் ஆப்காவில் தமிழகம், டெல்லி உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி நேற்று தொடங்கியது. பயிற்சியை கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் தொடங்கி வைத்தார். வேலூர் ஆப்காவில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி உட்பட 5 மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. வேலூர் ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் கருப்பண்ணன், பேராசிரியர் மதன்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆப்கா நிர்வாக உறுப்பினரும், கேரளா சிறைத்துறை டிஜிபியுமான ரிஷிராஜ்சிங் பங்கேற்று, பயிற்சி பெறும் சிறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அலுவலர்கள், உதவி சிறைத்துறை அலுவலர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு சிறைத்துறையில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Tags : State Prison Officers ,Vellore Afghanistan ,
× RELATED கடைசி கட்ட பயிற்சி!