நாகர்கோவிலில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல் 3 பேர் கைது

நாகர்கோவில், அக். 18: வடசேரி சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜா மற்றும் போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரி மணல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது. லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் எந்தவித ஆவணங்களும் இன்றி, திருச்சியில் இருந்து மணல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது லாரியில் இருந்த கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்த தாவீத்ராஜா போலீசாரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து லாரியில் இருந்து கோட்டூர்கோணத்தை சேர்ந்த ராஜ்குமார், பாகோடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின், தாவீத்ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் திக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் மீது அரசு வேலையை செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Tags : Nagercoil ,
× RELATED கஞ்சா விற்பனையில் தகராறு...