×

நாங்குநேரி தொகுதிக்கு 21ம் தேதி பொது விடுமுறை


சென்னை, அக். 18:  விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் வாக்களிக்க வசதியாக வருகிற 21ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் அந்த தொகுதி மக்கள் வாக்களிக்க வசதியாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் பிற தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அதேபோன்று, அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அந்த மாவட்டத்துக்குள் அல்லது அருகில் உள்ள மாவட்டத்தில் வசித்தாலும் அவர்கள் வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : holiday ,Nankuneri ,
× RELATED புதுவையில் இன்று அரசு விடுமுறை