×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சத்தியமங்கலம், அக்.18: புஞ்சைபுளியம்பட்டி காமாட்சியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மீனாட்சி (73). இவர், நேற்று காலை திருப்பூர் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே சென்றபோது பைக்கில் வந்த ஒருவர், மீனாட்சியிடம் உங்களுக்கு சத்தியமங்கலத்தில் உள்ள வங்கியில் பணம் வந்துள்ளது. வங்கியில் அழைத்து வருவதற்காக வந்துள்ளேன் என கூறியதை நம்பிய மீனாட்சி பைக்கில் ஏறி சென்றார். புங்கம்பள்ளி அருகே சென்ற போது பைக்கை நிறுத்திய நபர், கழுத்தில் தங்க நகை இருந்தால் பணம் தரமாட்டார்கள் என கூறியதும், மீனாட்சி தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார். நகையை வாங்கி கொண்டு அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச் சென்றார்.

Tags : grandfather ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு