×

முன்விரோத தகராறில் செருப்பால் அடித்தவர் கைது

முத்துப்பேட்டை, அக்.17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் காசடிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பாலசுப்பிரமணியன்(32). இவருக்கும் உப்பூர் புதுரோடு பகுதியை சேர்ந்த ராமு மகன் விஸ்வநாதன் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாலசுப்பிரமணியன் தோப்பில் இருந்த மின் மோட்டார் காணாமல் போனது. இதனையடுத்து நேற்று வீட்டு வாசலில் நின்று மின் மோட்டார் திருட்டு போனது திருடி சென்றவர்களை சத்தம்போட்டு திட்டியுள்ளார். அப்பொழுது அவ்வழியாக சென்ற விஸ்வநாதன் என்னைத்தான் நீ திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது விஸ்வநாதன் செருப்பால் பாலசுப்பிரமணியத்தை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த சிறப்பு எஸ்ஐ தினேஷ்குமார் விஸ்வநாதனை கைது செய்தார்.

Tags :
× RELATED சந்தன கடத்தல் வீரப்பன் சிறப்பு...