காப்பகத்தில் சிறுமி தற்கொலை

தண்டையார்பேட்டை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமிக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இளையமகள் சபரியம்மாள் (16) என்பவரை கேரளாவில் வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தை தொழிலாளி என்ற முறையில் கேரளா போலீசார் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் சபரியம்மாள் ஒரு வருடத்திற்கு முன்பு பிராட்வே பிடாரியார் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

Advertising
Advertising

கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வந்த சவரியம்மாள், ‘இங்கு தங்கி இருப்பது பிடிக்கவில்லை’ என்றும், தன்னை சொந்த ஊருக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில் சபரியம்மாள் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து முத்தியால்பேட்டை ஆய்வாளர் அப்துல் காதர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து  சபரியம்மாளின் தாய்க்கு  தகவல் கொடுத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: