தாம்பரத்தில் நெடுஞ்சாலைத்துறையின் திட்ட அலுவலகம் திறப்பு

தாம்பரம்: சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு சாலை திட்டங்களுக்கான மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து தாம்பரம்-திண்டிவனம், பெங்களூரு-சென்னை பைபாஸ் சாலை, பசுமை வழிச்சாலை, மாமல்லபுரம்-புதுச்சேரி ஆகிய சாலைகளுக்கான திட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக தாம்பரத்தில் புதிய அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக மேற்கு தாம்பரம் கோவிந்தராஜன் தெருவில் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில் நேற்று காலை மேற்கு தாம்பரம் கோவிந்தராஜன் தெருவில் நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இதில், திட்ட இயக்குனர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: