×

உடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

உடுமலை, அக். 15: உடுமலையில் பஸ் நிலையம் அருகே நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. உடுமலை நகரில், மத்திய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரவுண்டானா  அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, பேருந்து நிலையத்தில் இருந்து கல்பனா சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக அப்பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். நடை மேம்பாலம் அமைக்க குழி தோண்டியதோடு சரி. எந்த பணியும் நடக்காமல் இருந்தது. இதனால் தள்ளுவண்டி கடைக்காரர்களும், பயணிகளும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுபற்றிய செய்தி தினகரன் நாளிதழில் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், நடைமேம்பாலம் அமைக்க இரும்பு தூண்கள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால்தான், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Commencement ,Udumalai ,bridge ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு