இடைப்பாடியில் 90 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, அக்.10: இடைப்பாடி புதன்சந்தையில், புரட்டாசி மாத எதிரொலியாக நேற்று 90 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனையானது.இடைப்பாடியில் புதன்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. நேற்று நடந்த சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 90 டன் காய்கறிகள், 200 கோழிகள் உள்ளிட்டவைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், தக்காளி ₹18-25 வரையும், பீன்ஸ்(1கிலோ) ₹50, கேரட் ₹55, முட்டைகோஸ் ₹12-15, உருளைகிழங்கு ₹18-₹22, பீட்ரூட் ₹30, இஞ்சி ₹60, கத்தரிகாய் ₹20-35, முள்ளங்கி ₹15, சின்ன வெங்காயம் ₹30-40, மிளகாய் ₹30-35, பெரிய வெங்காயம் ₹30-40 வரை விற்பனையானது. இதேபோல், கால்நடைகளுக்கான கயிறு, சங்கு, சலங்கை, மணி ஆகியவை ₹10-90 வரையும், மூங்கில் கூடைகள் ₹50-200 வரையும் விற்பனையானது. மொத்தமாக, ₹30 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: