×

மின்னல் தாக்கி 2 பசு பலி

நாங்குநேரி, அக். 10:  நாங்குநேரி அருகே மின்னல் தாக்கி 2 பசுக்கள் பலியானது. நாங்குநேரி  அருகே உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் மாசானம் ஆறுமுகம் (55). விவசாயியான  இவர், 2 பசு மாடுகளை வளர்ந்து வந்தார். தினமும் அருகே உள்ள கோக்கனேரி  காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். சம்பவத்தன்றும் மாலையில் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

Tags :
× RELATED மணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி