×

நரியன் ஓடையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, அக். 10:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவு விவசாயம் பயிர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேந்தநாடு, கல்லமேடு, கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், களத்தூர், ஆண்டிக்குழி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மழைநீர் செல்லும் முக்கிய ஓடையாக நரியன்ஓடை உள்ளது. இந்த ஓடையின் வழியாக மழை காலத்தில் ஓடும் மழைநீர் கெடிலம் ஆற்றில் சென்று கலக்கும் வகையில் உள்ளது.

இந்த ஓடையின் வழியாக ஓடும் மழைநீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பருவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் முக்கிய ஓடையாக உள்ள இந்த நரியன் ஓடை தற்போது முட்செடிகள் மண்டி புதர்போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சேந்தநாடு கிராமத்திற்கு செல்லும் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு முட்செடிகள் புதர்போல் மண்டி உள்ளதால் மழைகாலங்களில் மழைநீர் முறையாக விவசாய
நிலத்திற்கு செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்க கூடிய நரியன் ஓடையை சீரமைத்து முட்செடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

Tags : stream ,Nariyan ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்