×

ஆழ்வார்குறிச்சியில் பெண்ணிடம் நகைபறிப்பு

கடையம்,அக்.9: ஆழ்வார்குறிச்சியில் கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் செண்பகாதேவி அம்மன் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி சீதாலட்சுமி (55). இவர் நேற்று மதியம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சுடலை மாடசாமி கோயிலுக்கு சென்று பஸ்சிற்காக நடந்து சென்ற போது பின்னால் வந்த மர்மநபர், சீதாலட்சுமி அணிந்திருந்த 20 கிராம் செயினை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து சீதாலட்சுமி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  சப் இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் வழக்கு பதிந்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார். ஆழ்வார்குறிச்சியில் பட்டபகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tags :
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி