ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு

ஆத்தூர், அக்.4:  ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய படுக்கை வசதி இல்லாததால் வெறும் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தினகரனில் செய்தி வெளியானது.இதனை தொடர்ந்து நேற்று சேலம் மண்டல மருத்துவ இணை இயக்குனர் வளர்மதி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தைகளை பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்கவும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் கிருபா, சங்கர், பியூலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: