×

இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்பூர், செப்.20: திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பூர் வருகை தர உள்ளார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி வாலிபாளையம் பகுதி 42வது வட்டம் காட்டுவளவிலும், 10 மணியளவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி வேலம்பாளையம் பகுதி 4வது வட்டம் வெங்கமேட்டிலும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, வட்ட கழக நிர்வாகிகளும் கழக முன்னோடிகளும், இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Youth Team Membership Admissions Camp ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது