×

தீவிபத்து நிவாரணம் வழங்கல்

திண்டிவனம், செப். 19: திண்டிவனம்  அடுத்த கொணக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி  சாவித்திரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இவரது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்து பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி,  துணிமணிகள், பாய், தலையணை, பாத்திரங்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.  அப்போது திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன், ரவி, அருண்விஜயன், ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...