×

குழாய்கள் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்

சின்னமனூர், செப். 17: சின்னமனூரில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகியும் நகராட்சி நிர்வாகம் மெத்தம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சின்னமனூரில் உத்தமபாளையம் சாலையில் உள்ள வேம்படிகளம் முல்லைப் பெரியாற்றுக்குள் இரண்டு உறைகிணறுகள் மூலம் தண்ணீர் தேக்கப்படுகிறது.  கரையில் உள்ள பவர் ஹவுஸிலிருந்து சேகரமாகும் தண்ணீரை பம்பிங் செய்து உழவர் சந்தைக்கு அருகிலுள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு சென்று 27 வார்டு நகர மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனங்களின் அழுத்தங்களால் ஆங்காங்கே  குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்ள் புகார் செய்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

தற்போது சின்னமனூர் பிடிஆர் கால்வாய் தெருவில் இரு இடங்களில்  குழாய் உடைந்து  தண்ணீர் வெளியேறி சாக்கடை நீரில் கலந்து வருகிறது. இதுகுறித்து விவசாய ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், `` சின்னமனூர் நகர் பகுதியில் அடிக்கடி குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. புகார் செய்தார் யாரும் வருவதே இல்லை. நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருகிறது. குடிநீரை  வீணாக்குவது நகராட்சி நிர்வாகத்திற்கு நல்லதல்ல’’ என்று கூறினார்.விவசாயி திருஞானம் கூறுகையில்,``குடிநீர் குழாய் உடைப்பு பிரச்னையில் நகராட்சி மெத்தமாக இருப்பது பெரும் குடிநீர் பிரச்னைக்கு வித்திட்டு விடும்.எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

Tags :
× RELATED கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில்...