ஆத்தூரில் கஞ்சா விற்ற முதியவர் கைது

ஆத்தூர், செப்.17: ஆத்தூர் பகுதியில், கஞ்சா பழக்கம் அதிகளவில் இருப்பதாக கலெக்டர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்டோருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆத்தூர் டிஎஸ்பி உத்தரவின்பேரில், ஆத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செல்லியம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளங்கோ(59) என்பவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது