நண்பனின் அக்காவை எரித்து கொன்றது ஏன்?

கள்ளக்குறிச்சி, செப். 15: சின்னசேலம் அருகே நண்பனின் அக்காவை எரித்துக் கொன்றது ஏன் என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சின்னசேலம் அருகே பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை(32). இவருடைய மனைவி அருணாதேவி (29). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சின்னதுரை தன் மனைவி, குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த பொங்கலின்போது சீர்வரிசை கொடுக்க அவரது தம்பி பிரசாந்த் வந்தார். அவருடன் அவரது நண்பர் ஏழுமலை(19) என்பவரும் வந்தார். அப்போது நண்பனின் அக்காவை பார்த்த ஏழுமலை அவருடைய அழகில் மயங்கி ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். செல்போனிலும் பேசி தொல்லை கொடுத்துள்ளார்.

இதை அருணாதேவி தன் கணவரிடம் சொல்லி புலம்பி உள்ளார். அப்போது செல்போன் எண்ணை மாற்றிவிட்டு வேறு எண் வாங்கி பயன்படுத்துமாறு கூறி உள்ளார். அதன்படி வேறு எண் மாற்றியுள்ளார். இதனால் அருணாதேவியை தொடர்பு கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்த ஏழுமலை கடந்த மாதம் 31ம் தேதி அருணாதேவி வீட்டிற்கு வந்து ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த ஏழுமலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இதில் ஏழுமலைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஏழுமலையை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். கைதான ஏழுமலை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: நானும், அருணாதேவியின் தம்பி பிரசாந்தும் நண்பர்கள்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரசாந்தின் அண்ணன் கார்த்திக் குழந்தை பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு அருணாதேவியும் வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் எனக்குள் காதல் ஏற்பட்டது. அப்போது அவரை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டேன். அதன் பின்னர் பிரசாந்துடன் பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக அருணாதேவி வீட்டுக்கு சென்றேன். அங்கு அவரிடம் செல்போன் எண் வாங்கினேன். தொடர்ந்து அவருடன் அடிக்கடி பேசி வந்தேன். அவருக்கு வரும் வாட்ஸ்அப் தகவல்களை வாட்ஸ்அப் வெப் ஸ்கேனர் மூலம் ஹேக் செய்து அவருக்கு வரும் தகவல்களை நானும் பார்த்து வந்தேன். மேலும் எனது ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தி வந்தேன். நான் அருணாதேவியுடன் பேசி வருவது அவரது அண்ணன் கார்த்திக்கிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் சண்டை போட்டார்.

இதனால் விரக்தியடைந்த நான் சம்பவத்தன்று அருணாதேவி வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை ஏன் வெளியில் சொல்கிறாய் என கேட்டு மீண்டும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேன். மேலும் எனது ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினேன். அதற்கு அருணாதேவி மறுக்கவே, அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தேன் என ஏழுமலை வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : sister ,
× RELATED டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில்...