×

ஆற்று மணல் கடத்திய 3 மாட்டு வண்டி பறிமுதல்

திருக்கோவிலூர், செப். 15: திருக்கோவிலூர் அடுத்த முகையூர் பகுதியில் அரகண்டநல்லூர் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் குமார் (45), சோமு மகன் நாகலிங்கம் (55), மரிய பிரான்சிஸ் மகன் விக்டர் (45) ஆகிய மூவரும் அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 3 மூதாட்டி பலி