×

இலவச பொது மருத்துவ முகாம்

விக்கிரவாண்டி, செப். 15: மயிலம் அருகே மோழியனூர் கிராமத்தில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் மயிலம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்தது. மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். மோழியனூர் மருத்துவ அலுவலர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வாசு வரவேற்றார். மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி முகாமை துவக்கி வைத்து பேசினார். இதில் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, சித்த மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது.

பின்னர் நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.இதில் கட்சி நிர்வாகிகள் சக்திவேல், குமார், மற்றும் வட்டாரத்திலுள்ள மருத்துவ அலுவலர்கள், சமுதாய செவிலியர்,  சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : General ,Camp ,
× RELATED 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...