கார் மோதி 2 பேர் படுகாயம்

திருக்கோவிலூர், செப். 11: திருக்கோவிலூர்  அருகே ஐதராபாக்கம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி ஆதித்யா (29).  இவர் வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியை சேர்ந்த  வைத்தியநாதன் மனைவி சுந்தரி என்பவருடன் கண்டாச்சிபுரம் அருகே உள்ள  ஒதியத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது  பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில்  இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ேசர்த்தனர்.இதுகுறித்து ஆதித்யா  கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.Tags : Car collision ,
× RELATED கார் மோதி விபத்து 3 பேர் படுகாயம்