×

குமரியில் இளம்பெண்ணை விஷம் கொடுத்து கொன்றவர் திருட்டு பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி ஜாலியாக வலம் வந்த கொலையாளி சிக்கினார்

குலசேகரம், செப்.11 :  குமரியில் திருட்டு பைக்கில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி வலம் வந்த, கொலையாளியை போலீசார் பிடித்து, கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர், கேரள மாநிலம் கொல்லத்தில் தான் சிறு வயது முதல் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி, முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். ராஜேசுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இதனால் பண தேவைக்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார். ஸ்டூடியோ நடத்தி வந்ததால்,கேமரா பற்றி நன்றாக தெரியும். அந்த வகையில் கேமராக்கள் பார்ப்பது போல் ெசன்று அவற்றை திருடுவது, பழைய கார், பைக்குகளை வாங்குவது போல் நடித்து திருடுவது இவரின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. மேலும் பெண்களுடன் நெருங்கி பழகி அவர்களிடமும் பணம், நகைகளை வாங்கி ஏமாற்றி உள்ளார். ேகரளாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன.தொடர் சம்பவங்களுக்கு பின், கேரளாவில் இருந்து ெசாந்த ஊரான பிணந்தோடு வந்த ராஜேஷ்  செல்போன், கேமரா விற்பனை செய்யும் கடையை தொடங்கினார். தக்கலை உண்ணாமலைக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்துள்ளார். அதன் பின்னரும் இவர் மாறவில்லை. செல்போன் ரீ சார்ஜ் செய்ய வரும் பெண்களை குறி வைத்து பணம், நகைகளை பறித்தார். பார்ப்பதற்கு டிப் டாப் உடையில் இருந்ததால், இவரிடம் பெண்கள் பலர் வீழ்ந்தனர்.அந்த வகையில், குலசேகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த லில்லிபாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கள்ளக்காதலாக மாறியது. லில்லிபாய், ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவரிடம் இருந்து அதிக பணத்தை ராஜேஷ் வாங்கினார். பின்னர் பணத்தை லில்லிபாய் கேட்ட போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், கடந்த நவம்பர் மாதம் லில்லிபாயை பணம் தருவதாக நண்பர் காரில் கன்னியாகுமரி அழைத்து வந்து ஜாலியாக இருந்துள்ளார். பின்னர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, சிற்றார் பட்டணங்கால்வாயில் உடலை வீசி விட்டு சென்றார். திருவட்டார் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ராஜேசை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த பின்னர் தனது 2 வது மனைவியின் ஊரான உண்ணாமலைக்கடையில் ஸ்டூடியோ தொடங்கினார். அதன் பின்னரும், இவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கேரளாவில் ராஜேஷ் மீதுள்ள திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அங்குள்ள போலீசார் இவரை தேடி வந்தனர். இவர் குமரி மாவட்டத்தில் இருக்கும் தகவல் அறிந்து, அங்கிருந்து வந்த தனிப்படை போலீசார் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேடினர். ஆனால் ராஜேஷ் அவர்களிடம் சிக்க வில்லை. பின்னர் குமரி மாவட்ட தனிப்படை போலீசார் உதவியை நாடினர்.

இதையடுத்து குமரி மாவட்ட தனிப்படை போலீசாரும், ராஜேசை தேடி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தக்கலை உண்ணாமலைக்கடை அருகே  ராஜேஷ், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைக்கில் வந்த போது போலீசாரிடம் சிக்கினார். அவரை தனிப்படை போலீசார், பிடித்ததும் தன்னை நிருபர் என்று கூறினார். ஆனால் ஏற்கனவே ராஜேசை தனிப்படை போலீசாருக்கு நன்கு தெரியும் என்பதால் அவரை மடக்கி பிடித்து, கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கேரள போலீசார் ராேஜசை  அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் திருடிய பைக் மற்றும் கார் போன்றவற்றை மீட்கும் பணியில் கேரள போலீசார் ஈடுபட்டு உள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் தான் பயன்படுத்தும் வாகனத்தில், பிரஸ் என்ற ஸ்டிக்கரை ராஜேஷ் ஒட்டி உள்ளார். இவ்வாறு ஸ்டிக்கர் இருந்தால் போலீசார் பிடிக்க மாட்டார்கள் என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டு, அதன்படி பிரஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வலம் வந்ததாக கூறினார்.

போலி நிருபர்கள் அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் சமீப காலமாக போலி நிருபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கார்கள், பைக்குகள், ஆட்டோக்களில் பிரஸ் என ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு கஞ்சா, மது வகைகள், ரேஷன் அரிசி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஹெல்மெட் போடாமல் தப்புவதற்காக பலர் பிரஸ் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டுகிறார்கள். இது தவிர பிரஸ் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டியதுடன், போலியாக அடையாள அட்டை தயாரித்து நிருபர்கள் என கூறி கல்குவாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பல தரப்பினரை மிரட்டி பணமும் பறித்து வருகிறார்கள்.  எனவே காவல்துறையினர் இது தொடர்பாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிணத்துடன் காரில் வலம் வந்தவர்
லில்லிபாயை கொன்ற பின், அவரது பிணத்தை என்ன செய்வது என்பது தெரியாமல், பல மணி நேரம் பிணத்தை காரில் வைத்துக்கொண்டு குமரி மாவட்டம் முழுவதும்  ராேஜஷ் வலம் வந்தார். பின்னர் பட்டணங்கால்வாய் பகுதியில் உடலை வீசினார். விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த லில்லிபாய், வயிறு வலிப்பதாக கூறி வாந்தி எடுத்துள்ளார். எங்கு பிழைத்து விடுவாளோ? என்ற பயத்தில் வயிற்று வலிக்கு மருந்து வாங்கி கொடுப்பது போல், உரக்கடையில் பூச்சி மருந்தை வாங்கி கொடுத்து கொலை செய்தார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...