ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

அரியலூர், செப். 10: அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது. ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நடந்த கண்காட்சியை கலெக்டர் வினய் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
 கண்காட்சியில் சத்தான உணவுப்பொருட்கள், காய்கறிகள், பயறு வகைகள் உள்ளிட்டவை இடம் பெற்றன. இதை மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இவர்களுக்கு மேற்கண்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags : Nutrition Awareness Exhibition ,
× RELATED ரத்தசோகை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி