தேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி

தேனி, ஆக. 22: தேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் தொழிலாளர் நல உதவி ஆணையராக இருப்பவர் ராஜ்குமார். தேனியில் சாய்ராம் பவர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் சபரிவேல்ராஜ் (46) இவரது அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த 20 போட்டரிகளை ரீசார்ஜ் செய்து தருவதாக கூறி எடுத்துச் சென்றவர், சரி செய்து தராமல் விற்பனை செய்து விட்டார். தேனி போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED பெனடிக்ட் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்