தேனியில் பாழடைந்து கிடக்கும் பல லட்சம் மதிப்புள்ள கட்டடம்

தேனி, ஆக. 22: தேனியில் வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டடம் பாழடைந்து கிடக்கிறது. இரவில் சமூக விரோதிகளுக்கு வசதியான இடமாக மாறியுள்ளது. தேனியில் தினசரி மார்க்கெட் வளாகத்தில் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் தேனி வேளாண்மை விற்பனைக்குழு அலுவலக பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டது. அதன் பின்னர் வேறு எந்த பயன்பாட்டிற்கும் இந்த கட்டடம் பயன்படுத்தப்படவில்லை. இந்த கட்டடத்திற்கு பூட்டுப்போட்டு விட்டனர். பல ஆண்டுகளாக இந்த கட்டடம் பாழடைந்து கிடக்கிறது. இதனால் புதர்மண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் தங்களின் வசதிக்கு பயன்படுத்தி வருகின்றனர். அரசு அலுவலகம் செயல்பட்ட இடம் தற்போது சமூக விரோத செயல்பாடுகளுக்கு பயன்படுவது இப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த கட்டடத்தை வேறு ஏதாவது ஒரு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் வலியறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு கதராடை தயாரிப்பு குறித்த செயல் விளக்கம்