செப்.8ம் தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

நாகர்கோவில், ஆக.22:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு:நாகர்கோவில் - தாம்பரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 82646 நாகர்கோவில் - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து வரும் செப்டம்பர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06063 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 9ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயிலில் ஏசி 2டயர் 1, ஏசி3 டயர் 3, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது 2ம் வகுப்பு பெட்டிகள் 4 மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 ஆகிய பெட்டிகள் இடம்பெறும்.

Tags :
× RELATED தாணுலிங்க நாடார் பிறந்தநாள் விழா...