×

சிட் பண்டில் செலுத்திய பணம் திரும்ப கிடைக்கவில்லை

நாகர்கோவில், ஆக.20: அகில இந்திய முன்னாள் பிஎஸ்எப் வீரர்கள் நல சங்க பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்து மனுவில் கூறியிருப்பதாவது:தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பென்ஷனை தவிர ேவறு வருமானம் இன்றி வாழ்ந்து வருகிறார். தனது பெண் குழந்தைகளின் நலன் கருதி தனக்கு கிடைக்கும் பென்ஷனில் ஒரு குறிப்பிட்ட தொகையை பள்ளியாடி ரெத்னா சிட் பண்டில் மார்த்தாண்டம், பள்ளியாடி கிளைகளில் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டு கொண்ட 2 சீட்டில் சேர்ந்து மாதம் சீட்டு தொகையாக ரூ.2500 வீதம் கட்டி வந்துள்ளார்.

தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளாக மாத தவணையாக செலுத்திய தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 626 ஆகும். சீட்டு முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில், நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டது.  இருப்பினும் இதுவரை பணம் திரும்ப கிடைக்கவில்லை. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்ைக எடுத்து 7 சதவீத அபராதம் விதித்து முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்திற்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...