கம்பம் பள்ளத்தாக்கில் மழையால் மகிழ்ச்சி

கம்பம், ஆக.14: கம்பம் பள்ளதாக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து மானாவாரி நிலங்களில் தண்ணீர் தேங்கியதால், கருகிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் எதிர்பார்த்த விவசாய பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பருவமழை தொடர்ந்து பெய்ததால், கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரப்பகுதிகளான ஏகலூத்து, புதுக்குளம், மணிகட்டி ஆலமரம் பகுதிகளிலும் உள்ள மானவாரி நிலங்களில் தண்ணீர் தேங்கியது. நிலம் தண்ணீர் பிடிப்பு ஏற்பட்டதால் மானாவாரிநிலத்தில் தண்ணீர் இன்றி கருகிய பயிர்கள் தற்போது துளிர்விட ஆரம்பித்துள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED . கண்டமனூர் அருகே ஜல்லிக்கற்கள் ...