வழக்கில் ஆஜராகாத 2 பேர் சிறையில் அடைப்பு

சேலம், ஆக. 14: சேலத்தில் பிடிவாரண்டை ரத்து செய்ய நீதிமன்றத்தில் ஆஜரான 2 பேரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கமுள்ள மன்னாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சக்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து சக்தி ெகாடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் பரமேஸ்வரன், செல்வராஜ் உள்பட 5 பேர் மீது வன்ெகாடுமை சட்டத்தில் 2015ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த வாய்தாவின் போது 5 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால் நீதிபதி குமரகுரு, இவர்களுக்கு வாரண்ட் பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று பரமேஸ்வரன், செல்வராஜ் ஆகியோர் வாரண்டை ரத்து செய்ய கோரி கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertising
Advertising

Related Stories: