தமிழகம் முழுவதும் பழுதடைந்தவற்றுக்கு பதிலாக 300 ஊராட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

வேலூர், ஆக.14: தமிழகம் முழுவதும் பழுதடைந்த அலுவலகங்களுக்கு பதிலாக 300 ஊராட்சி அலுவலகங்கள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில், 79,394 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியில் தனித்தனியாக ஊராட்சி மன்ற அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும். இதனால் அலுவலகம் பழுதடைந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய ஊராட்சி அலுவலகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி புதிதாக ஊராட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி கட்டிடத்திற்கு தலா ₹19 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் முதற்கட்டமாக 300 ஊராட்சி அலுவலனங்கள் கட்ட ₹59 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக அரசு 2019-2020ம் ஆண்டில் உரிய நெறிமுறைகளை பின்பற்றி முதற்கட்டமாக 300 ஊராட்சிகளில் புதிதாக அலுவலகங்கள் ₹59 கோடியில் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதை ஒவ்ெவாரு மாவட்டத்துக்கும் எத்தனை ஊராட்சி அலுவலகங்கள் வழங்குவது குறித்து மாவட்ட வாரியாக பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விரைவில் டெண்டர் விடப்பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டிட பணிகள் தொடங்க உள்ளது’ என்றார்.
Tags :
× RELATED சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு