×

பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

நாகர்கோவில், ஆக.14: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் நகரம் தமிழகத்தின் தேன் கிண்ணம் என வர்ணிக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளால், தலா a32 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தேனீ வளர்ப்போர் உள்ளனர். இவர்களிடம் உள்ள 2 லட்சம் தேனீ குடும்பம் மூலம் ஏறக்குறைய 2 ஆயிரம் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2017-2018ம் ஆண்டு a58 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் 1,985 விவசாயிகளுக்கு 36,400 தேன் சட்டங்கள் மற்றும் உபகரணகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத்தொழிலை மேம்படுத்தும் வகையில், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பேச்சிப்பாறை, தோட்டக்கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் a1.50 கோடி மதிப்பீட்டில், தேனீ மகத்துவ மையம் அமையவுள்ளது.

இம்மையத்தில் ஒரு வகுப்பில் 50 பேருக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுபோன்று ராணி தேனீ உற்பத்தி மையத்தில், வீரியமிக்க ராணி தேனீக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தேனீ வளர்ப்பேருக்கு வழங்கப்படும். தேன் பதப்படுத்துதல் மையத்தில், தேனீ வளர்ப்போர் கொண்டு வரும் தேன் பதப்படுத்தி கொடுக்கப்படும். இதுபோன்று தேன் பரிசோதனை மற்றும் தர ஆய்வு மையத்தில் தேனீ வளர்ப்போர் எடுத்துவரும் தேனை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கப்படும். எனவே, குமரி மாவட்ட விவசாயிகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல், தங்கள் தொழிலை மாற்றி அமைத்து, தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்திலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...