வேலூர் வாக்காளர்கள் குறித்து அவதூறு பரப்பிய தேமுதிக நிர்வாகி மீது வழக்கு

ஆரணி, ஆக.11: வேலூர் வாக்காளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தேமுதிக நிர்வாகி மீது ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன்(35). இவர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேமுதிக இளைஞரணி செயலாளராக உள்ளார்.இந்நிலையில் கருணாகரன், வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர்ஆனந்திற்கு, வாக்களித்த வாக்காளர்கள் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதையறிந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நேற்று ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(தி.மலை) மணல் கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்

Tags :
× RELATED பணிகளில் ஈடுபடும் 17,500 அரசு ஊழியர்,...