×

முத்துப்பேட்டை அருகே காமாட்சி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

முத்துப்பேட்டை, ஜூலை 18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் தெற்கு தெரு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதம் பிறந்ததையொட்டி அம்மனுக்கு சந்தனப்காப்பு அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை முதல் கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை ஆகிவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை சாமிக்கு சிவாச்சாரியார் சட்டநாதன் சாமிகளால் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் அருள்பாலிதார். பின்னர் இரவு நடந்த திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாரம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...