×

சம்பளம் வழங்காததை கண்டித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

கன்னியாகுமரி, ஜூலை 18: கன்னியாகுமரி பேரூராட்சியில் ஊதியம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி பேரூராட்சியில் துப்புரவு மற்றும் மின் பராமரிப்பு, குடிநீர் உடனாளர் என 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் நேரடியாக ஒப்பந்த பணிகளுக்கு அமர்த்தாமல் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தினசரி 400 ரூபாய் வீதம்  மாதந்தோறும் 5ம் தேதி ₹12  ஆயிரத்து 400 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக  5ம் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் 15ம் தேதிக்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தற்போது ஒருசில பணியாளர்களுக்கு ₹800 வரை பிடித்தம் செய்து மீதிப்பணம் வழங்கப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள், மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு முன்பு போல் 5ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத் தொகையை பிடித்தம் செய்யாமல் முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நேற்று  கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...