சார் பதிவாளர் அலுவலகத்துக்கு விரைவில் கட்டிடம் கட்டப்படும்

செஞ்சி. ஜூலை 18:   விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு ஆண்டொன்றுக்கு ரூ. 84 ஆயிரம் வாடகை கொடுத்து இயங்கி வருகிறது.  இதற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா என செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட உள்ளது ஆனால் முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டித் தரப்படும் என கூறினார். மேலும் செஞ்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை கட்டித் தரப்படுமா எனவும் இதேபோன்று அவலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சுற்றுசுவர் குடிநீர் கழிவறை அமைத்து தரப்படுமா என செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த அமைச்சர் விரைவில் பொது மக்களுக்கு ஏற்ப வசதிகளை செய்து தரப்படும் என பதிலளித்தார்.

Tags :
× RELATED பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா