×

களைகட்டும் கம்மங்கூழ் வியாபாரம் பெரியகுளம் டூ வத்தலக்குண்டு பாடாவதி பஸ்களால் பயணிகள் அவதி

தேவதானப்பட்டி, ஜூலை 16: பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் அரசு பஸ்கள் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பெரியகுளம் அரசு பணிமனையில் இருந்து ஒரு பஸ்சும் வத்தலக்குண்டு அரசு பணிமனையில் இருந்து இரண்டு பஸ்சும், தேவதானப்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, டி.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, காட்ரோடு, வழியாக வத்தலக்குண்டு சென்று வருகிறது. இந்த அரசு பஸ்கள் முற்றிலும் பழுதடைந்து சேதமடைந்துள்ளது. பஸ்சுக்குள் இருக்கைகள், கைபிடிகள் அனைத்தும் சேதமடைந்து இருக்கிறது. சில நேரங்களில் இருக்கையில் அமரும்போது பயணிகளை காயப்படுத்தி விடுகிறது. இதுகுறித்து பயணிகள் உரிய அரசு பணிமனைக்கு புகார் அளித்தும் பஸ்களை மாற்றாமல் அப்படியே இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அரசு போக்குவரத்து அதிகாரிகள் பெரியகுளத்தில் இருந்து சில்வார்பட்டி, தேவதானப்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் அரசு பஸ்களை மாற்றி புதிய பஸ்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு